ரெண்டாவது தாலியும் நிலைக்கலை... திருமணமாகி 8 நாளில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை!

 
ஸ்ரீஜா

முதல் கணவருடனான திருமண வாழ்க்கை ஒத்து வராத நிலையில், அவரை விட்டுப் பிரிந்து தனியே மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார் ஸ்ரீஜா. காதலும், காமமும் எப்போது வாழ்க்கையைப் புரட்டி போடும் என்று யாருக்கும் தெரியாது தானே? தனது காமம் + காதல் காரணமாக ஏற்கெனவே திருமணமாகி குழந்தை, மனைவியுடன் வாழ்ந்து வரும் ஷஜியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது ஸ்ரீஜாவுக்கு.

முதல் மனைவிக்கு தெரியாமலேயே ஷஜியும், ஸ்ரீஜாவும் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். 3 குழந்தைகள் உட்பட 5 பேரும் தனியே வசித்து வந்த நிலையில், இன்று காலை 5 பேருமே வீட்டில் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். 3 குழந்தைகளையும் கொன்று விட்டு, ஸ்ரீஜாவும், ஷஜியும் தற்கொலைச் செய்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா (38). இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, கடந்த ஸ்ரீஜா கடந்த புதன்கிழமை ஷஜி (42) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி 3 குழந்தைகளுடன் ஷஜி வீட்டில் வசித்து வந்தனர்.

ஸ்ரீஜா

இந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். ஷஜி வீட்டில் ஸ்ரீஜா அவரது கணவர் ஷஜி குழந்தைகள் 3 என 5 பேரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 5 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு ஸ்ரீஜா மற்றும் அவரது கணவர் ஷஜி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஜா

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது திருமணம் செய்த 8 நாட்கள் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web