மாலியில் தென்காசியைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உட்பட 5 பேர் கடத்தல்!

 
மாலி
 

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டின் கோப்ரி நகரத்தில் கிராமப்புற மின்மயமாக்கல் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளர்களை ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். தங்கும் விடுதியில் திடீரென நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல், துப்பாக்கி முனையில் ஐந்து தொழிலாளர்களை அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாலி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

மாலி நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசுப் படையும் பயங்கரவாத அமைப்புகளும் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் நடுவே ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டிருப்பது தாமதமாகவே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடத்தலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. அந்நிறுவனம் பாதுகாப்பு காரணம் காட்டி மற்ற இந்திய தொழிலாளர்களை நாடு திரும்ப அனுப்பியுள்ளது.

கடத்தப்பட்டவர்களில் இருவர் தமிழர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கிராஜா மற்றும் அருகிலுள்ள சுரேஷ் ஆகியோர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்காக மாலி சென்றிருந்தனர். இசக்கிராஜாவுக்கு மனைவி பீரவீணா, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் கண்ணீரோடு பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் கோரிக்கை அனுப்பி இருவரையும் உடனடியாக மீட்டுத் தருமாறு வேண்டியுள்ளனர். மாலி முழுவதும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த கடத்தல் சம்பவம் இந்தியர்களிடையே பெரும் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!