பயங்கர விபத்து... கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி... சிலர் கவலைக்கிடம்!

 
ராஜஸ்தான்

 ராஜஸ்தான் மாநிலத்தில்  வேகமாக வந்த 2  கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.  இதில்  4 பேர் படுகாயம் அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் உள்ள சிக்வால் பகுதிக்கு அருகே, தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

 பிரபலமான புனித யாத்திரைத் தலமான கதுஷ்யம் கோவிலுக்கு சென்று விட்டு 2 கார்களில், வீடு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததாக  போலீசார்  தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்து நேற்றிரவு 11 மணிக்கு நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மனோஜ் ஜாகர், கரண், சுரேந்திர குமார், தினேஷ் மற்றும் மதன் சரண் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்ததாக தெரிகிறது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?