பெரும் சோகம்... போலீஸ் வேன் மீது வாகனம் மோதி 5 காவல்துறை அதிகாரிகள் பலி!
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம் லாஸ்பேலா குவெட்டா-கராச்சி நெடுஞ்சாலையில் காவல்துறை அதிகாரிகள் சென்ற போலீஸ் வேன் மீது வாகனம் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 5 காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து லாஸ்பேலா மூத்த காவல் கண்காணிப்பாளர் "உத்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. எதிரில் வந்த வாகனம் மோதியதில் போலீஸ் வேன் கவிழ்ந்ததில் 3 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். "பலியான போலீசாரின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் வேன் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்ட பலுசிஸ்தான் முதல்வர் "காவல்துறை அதிகாரிகள் மரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வேதனையான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் மாகாண அரசாங்கம் துணை நிற்கிறது" எனக் கூறியுள்ளார். அத்துடன் படுகாயம் அடைந்த காவல்துறையினருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பயணிகள் ரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!