பகீர்... 5 வயது மாணவனை துணி துவைக்க சொல்லி கொடுமை... NHRC அதிரடி உத்தரவு!

 
nhrc
 


 
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவாவில்  தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த 5 வயது மாணவனை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய வழக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் பேரில், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமாக ரூ. 50,000ஐ மத்தியப்பிரதேச அரசு வழங்கியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு நிபந்தனை சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, ஆணையத்தின் அறிவிப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தவறு செய்த உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், வகுப்பு ஆசிரியர் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
வகுப்பு ஆசிரியர், அந்த 5 வயது மாணவனை உதவியாளரிடம் அனுப்பி இருக்கிறார். அவர் தனது அழுக்கு துணிகளை துவைத்து அணியும்படி  மாணவனை கட்டாயப்படுத்தினார். இதன் விளைவாக, அவருக்கு நோய் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது.


இதுகுறித்து ஆணையம்  ஜனவரி 23ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. பதிவில் உள்ள விஷயங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட உதவியாளரும் வகுப்பு ஆசிரியரும் கட்டாயப்படுத்தி, முழு வகுப்பினருக்கும் முன்பாக குழந்தைக்கு மன மற்றும் உடல் ரீதியான துன்பத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என ஆணையம் கண்டறிந்தது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?