50 விமானங்கள் ரத்து... தொடர் கனமழையால் பயணிகள் கடும் அவதி!

 
விமானம் விமான நிலையம்

 மகாராஷ்டிராவில் ஜூன் 2 வது மாதத்தில் மழைககாலம் தொடங்குகிறது. ஆனால் நடப்பாண்டில்  ஜூன் மாத தொடக்கம் முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது.  மும்பை பெருநகர பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.  இதன் காரணமாக மும்பை, தானே நகர்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. இதனால் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க நகர் பகுதிகளில் குடிநீர் விநியோக அளவு குறைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

இன்று  அதிகாலை நேரத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.  இந்த  தொடர் மழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் இன்று விமான சேவைகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டன.  ஓடுபாதை செயல்பாடுகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டன மற்றும் நகரத்தில் கனமழைக்கு பிறகு குறைந்த தெரிவுநிலை காரணமாக 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமானம் விமான நிலையம்

 50 விமானங்களில் 42 இண்டிகோ விமானமும், 6 ஏர் இந்தியா விமானமும், 2 அலையன்ஸ் ஏர் விமானமும் அடங்கும்.  அதிகாலை 2.22 மணி முதல் அதிகாலை 3.40 மணி வரை விமான நிலையத்தில் ஓடுபாதை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், 27 விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.மேலும் சில விமானங்கள்  ஆமதாபாத், ஐதராபாத், இந்தூர் போன்ற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web