அம்மாடியோ...வ்... ரூ52,00,000/- மின்சாரக் கட்டணம்... கதறும் இளைஞர்!

 
ஹரிசங்கர் மணியாரி

பீகார் மாநிலம் முசாபர்பூரில் வசிப்பவர் ஹரிசங்கர் மணியாரி. மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். ஜூன் 27ம் தேதி வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ஹரிசங்கரின் மகன் கூறியதால் மீண்டும் மின் இணைப்பு பெற ரூ.500 ரீசார்ஜ் செய்துள்ளார். ஆனால், வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து மணியாரி மின் கட்டணம் என்ன என்பதை சோதித்துள்ளார். அப்போது மணியாரிக்கு மின்கட்டணமாக ரூ.52,43,327 வந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அருகில் உள்ள மின்வாரிய அதிகாரிகளை அணுகி புகார் அளித்தார். அப்போது இதுகுறித்து பேசிய மணியாரி, "ஜூன் 27ம் தேதி எனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து மகன் கூறும்போது, ​​உடனடியாக மின் கணக்கில் ரூ.500 ரீசார்ஜ் செய்தேன். ஆனால், மீண்டும் மின்சாரம் வரவில்லை. பின்னர். மின்கட்டணத்தை பதிவிறக்கம் செய்தபோது, ​​52 லட்சம் ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகையை காட்டியது.இதையடுத்து, மின்துறை இளநிலை பொறியாளரை சந்தித்து முறையிட்டேன். நான் சரியான நேரத்தில் கட்டணத்தை கட்டி விடுவேன். என் வீட்டில் ஒரு நோயாளி இருக்கிறார். மின்சாரம் இல்லாமல் அவஸ்தை படுவதாக தெரிவித்தார்.

இதனிடையே மின்வாரிய செயற்பொறியாளர் ஷர்வன் குமார் கூறுகையில், "முசாபர்பூரில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகிறது. பழைய மீட்டரின் அளவீடுகள் புதிய ஸ்மார்ட் மீட்டருக்கு மாற்றப்பட்டதால் இந்த முரண்பாடு இருக்கலாம். ரசீதில் பிழை இருப்பதாக நினைக்கிறேன். மேலும் இது சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web