52 வயதில் முனைவர் பட்டத்தை பெற்று சாதித்த பெண்.. குவியும் பாராட்டு!

 
சுப்ரபாரதி மணியன்

இன்றைய காலத்தில் முப்பது கடந்தவர்கள் கூட 'இந்த வயதில் படித்துவிட்டு என்ன செய்யப் போகிறேன்?' என, சலிப்பு மனநிலையில் இருக்கும் போது, ​​52 வயதிலும், 'பிஎச்.டி., படிக்க வேண்டும்' என்ற பெரும் ஆசையை தனது 52 வயதில் அடைந்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த கோகிலாசெல்வி. திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் எழுதிய புத்தகம், கட்டுரை ஆராய்ந்து ' சுற்றுச்சூழல் படைப்புகளில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

திருப்பூரில் உள்ள சிக்கண்ணா கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர் உதவியோடு ஆய்வு செய்தார். திருப்பூர் வாசகர் சிந்தனைப் பேரவை கூட்டத்தில் கோகிலாசெல்வி அவர்களால் பாராட்டப்பட்டார். இதுகுறித்து பேசிய அவர், என்னால் முடியாது என பலர் சொன்னாம் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். 

சுப்ரபாரதி மணியன் எழுதிய நூல்களை எனது ஆய்வுக்கு பயன்படுத்தினேன். அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும்; குறிப்பாக பெண்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மாணவ சமுதாயம் உணர வேண்டும், என்றார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web