நாளை 53 ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு!!

 
ரயில்

புறநகர் பகுதிகளை சென்னையுடன் இணைப்பது மின்சார ரயில்கள் தான்.  மின்சார ரயில்கள் மூலம் தான்  லட்சக்கணக்கானோர் தினசரி பணிக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்னை வந்து செல்கின்றனர்.   சென்னையின் முக்கிய  பொது போக்குவரத்து சேவையாக புறநகர் சேவை இருந்து வருகிறது.  இந்நிலையில் சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் நாளை அக்டோபர் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால்  சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலாலன மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புறநகர் ரயில்

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்   சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வர முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.  அதே போல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயிகள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின்சார ரயில்

மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 புறப்படும் ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05க்கு புறப்படும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து காலை 10 ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 11.51, பகல் 12.35, 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10, 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.  அதே போல் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே காலை 9.30, பகல் 12.00 மணி, 1.00 மணி, 1.15 மணி, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web