தமிழகத்தில் மட்டுமே 56,000 சிம்கார்டுகள் முடக்கம்.... அதிகரிக்கும் குற்றங்கள்... சைபர் க்ரைம் அதிரடி!

 
sim

மொபைல் போன் வைத்திருப்பவர்கள் தினசரி போலி அழைப்புக்களால்  கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.  இவற்றை சைபர் க்ரைமில் புகார் அளித்தால் இந்த சிம்கார்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கப்பட்டவை. அந்த வகையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி தமிழகத்தில் மட்டும் 56,000  சிம் கார்டுகள் போலியானவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்து இது வரை  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போலி அழைப்புக்களை பொறுத்தவரை பெரும்பாலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவர். அல்லது உங்கள் மொபைல் எண்ணுக்கு பரிசு விழுந்திருப்பதாக கூறுவர். இந்த மோசடி இப்படித் தான் தொடங்கும்.  இவ்வகையான  குற்ற சம்பவங்களுக்கு பல மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. காரணம் அந்த செல்போன் எண்கள் அனைத்தும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டவை என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. 
cyber crime

இருப்பினும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால்,  மாநில சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை தொடங்கி, விவரங்களைச் சேகரித்து வந்தனர். அதன்படி புகார்கள் வந்துள்ள செல்போன் எண்களின் விவரங்களை, அந்தந்த சிம் கார்டு நிறுவனங்களுக்கு அனுப்பி அவற்றை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, இதுவரை 55982 சிம் கார்டுகளை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.

ஒருவருக்கு இத்தனை “SIM CARD” மட்டுமே!! மத்திய அரசு கிடுக்கி பிடி உத்தரவு!!

அதே நேரம், இது போன்ற போலி ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு சிம் கார்டுகளை விற்கும் நபர்களும் கைது செய்யப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த சிம் கார்டுகள் எந்த விற்பனை பிரதிநிதியிடமிருந்து வாங்கப்பட்டவை, எந்த நிறுவனத்தின் சிம் கார்டுகள் என விசாரித்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.  இதன் அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 12000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 விற்பனை பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web