5ஜி... அலைகற்றையில் அசத்தும் இந்தியா !!

 
ஜியோ


இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் அலைக்கற்றை சேவையில் நாலுகால் பாய்ச்சனைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தவகையில் ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் 5ஜி சேவையைத் தொடங்கி, மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்து கொண்டிருக்கின்றன.இதே காலகட்டத்தில் மத்திய அரசின் நிறுவனமான பிஎஸ்என்எல், இப்போதுதான் தன் 4ஜி சேவையை முழு வீச்சில் கொண்டு வருவதற்கான இறுதிகட்டப் பணிகளில் உள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்தார்.

வோடபோன்

இதுதொடர்பாக டில்லியில் அவர் கூறியதாவது... பிஎஸ்என்எல் நிறுவனம் தன் 4ஜி சேவையை முழு வீச்சில் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கான இறுதிக்கட்ட கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகத்துக்கான, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிஎஸ்என்எல் எதிர் பார்க்கிறது. இதனால், அஞ்சல் துறையுடன் இணைந்து, பிஎஸ்என்எல் சிறப்பான ஒரு சேவையை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட முடியும் என்று நம்புகிறோம்.
இது பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும். நாட்டின் எந்தெந்த பகுதிகளில் 4ஜி சேவை பலவீனமாக உள்ளதோ, அல்லது 4ஜி சேவை எட்டாத பகுதிகள் உள்ளதோ, அவற்றை அடையாளம் கண்டு முழு வீச்சில் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே, விரைவில் பிஎஸ்என்எல் தன் 4ஜி சேவையை, தேசத்துக்கான சேவையாக விரிவான முறையில் வழங்கும்.

பிஎஸ் என் எல்
அதேநேரத்தில், நாட்டில் 5ஜி அலைக்கற்றை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, அதன் விரிவாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கி றது. உலகில் 5ஜி அலைக்கற்றை பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா அளவுக்கு உலகின் வேறு எந்த நாட்டிலும், அதிவேக சேவையில் சாதிக்கவில்லை. இப்போது நாட்டின் 800 மாவட்டங்களில் 5ஜி சேவை கிடைக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web