5 வது நாளாக தொடரும் அதிரடி ரெய்டு...அனுமதியில்லாத பார்களால் டாஸ்மாக்குக்கு ரூ420 கோடி நஷ்டம் !!

 
செந்தில்பாலாஜி


கரூரில் செந்தில் பாலாஜி உறவினர்கள் நண்பர்கள் என  அனைவரையும் கதறவிட்டுக்கொண்டிருக்கிறது வருமான வரித்துறை இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி செயல்படும் பார்களால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூபாய் 420 கோடி இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர, பல பார்களில், மது ஆலைகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து  கலால் வரி செலுத்தாமல் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது, டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிவதோடு, அரசுக்கு வரவேண்டிய கலாய் வரி வசூலும் குறைந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

டாஸ்மாக்
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து கடைகள் 130 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. அவற்றில் 3 ஆயிரத்து 600 டாஸ்மாக் கடைகளுக்கு பார் அனுமதி உள்ளது. அந்த கடைகளோடு. செயல்பட்டு வந்த பார்களுக்கான லைசன்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி காலாவதியாவது 31 மாவட்டங்களில் உள்ள பார்களுக்கான டெண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இருந்தது. அந்த டெண்டர் வெளிப்படையாக இல்லை ஆளும்கட்சியினர் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்' என்று குற்றச்சாட்டு எழுத்தது. இது தொடர்பான வழக்கில் 31 மாவட்டங்களில் நடைபெற இருந்த டெண்டரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சட்டவிரோத பார்கள் அதிகமாக இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது, இதுகுறித்து டாஸமாக் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்

ஸ்டாலின்

தமிழகத்தில் 3 ஆயிரத்து 8 டாஸ்மாக் கடைகளோடு சேர்ந்து நடத்தி வந்த பார்களில் பல புதுப்பிக்கப்படவில்லை. இருப்பினும் அந்த பார்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பார் நிர்வாகமும், தொடர்ந்து நடந்த இடங்களிலேயே முறைகேடாக அனுமதி வழங்கப்படாமல் இயங்கி வருகிறது. இதனால் அதிக வருவாய் இழப்பை டாஸ்மாக் சந்தித்து வருகிறது அனுமதியில்லாத பார்களால் டாஸ்மாக்குக்கு இழப்பு ரூபாய் 420 கோடி என்றும் மதிப்பிடுகிறார்கள்.அத்தோடு அரசு நிர்ணயித்த நேரத்தை கடந்து அதாவது முடிய பிறகு கடைகளில் முன்கூட்டியே வாங்கி வைத்த பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செயப்படுகிறது இது ஒருபுறம் இருக்க தூற்றுக்கணக்கான பார்களில் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு போலி சரக்குகளை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து விற்கின்றனர்.  இந்த பாட்டில்களுக்கு கலால் வரி செதுக்கப்படுவதில்லை. இதன் மூலம், பார் நடத்துபவர்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூபாய் 80 முதல் ரூபாய் 100 வரை லாபம் பார்க்கிறார்கள் இதனால் டாஸ்மாக் விற்பனை சரித்து வரிவசூலும் சரிந்துள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில்  "தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் பார்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருச்சி, கரூர் உட்பட பல மாவட்டங்களில் சட்ட விரோதமாக செயல்பட்ட நூற்றுக்கும் அறியமான பார்கள் கண்டறியப்பபட்டுள்ளன வருவாய் இழப்பு தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செய்ல்ப்பட்டுள்ளது" என்கிறார்கள்.

இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கையில் அனுமதி இல்லாமல் பார்கள் செயல்பட ஊழியர்கள் அனுமதிக்ககூடாது தினமும் பகல்  12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அதுவும் கடைகளில் கேட் உட்புறமாக இருந்தபடி மட்டுமே மது விற்க வேண்டும்" என்று அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் இது எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல கரூர் நிர்வாகம் தனியாக செயல்பட்டு வருகிறது இதையெல்லாம் விட கொடுமை தற்பொழுது 2000 ரூபாய் நோட்டை கொடுத்து சரக்கு கேட்டால் நூறு ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு மதுவிலை போக 1900 ரூபாய்கு மட்டுமே பாக்கி தருகின்றனர் யாராவது தட்டிக்கேட்டால் உன்னால என்ன முடியுமோ செஞ்சுக்க என உற்சாகப்பிரியர்களை உதைத்து அடிக்கின்றனர். இரண்டாண்டு கால ஆட்சியையை சாதனை என அரசு சொல்லி வரும் வேளையில் வேதனை என உற்சாகப்பிரியர்கள் குழுறுகிறார்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web