“நயா பைசா வரதட்சணை வேண்டாம்...” 6 சகோதரிகளை திருமணம் செய்துக் கொண்ட 6 சகோதரர்கள்!

 
பாகிஸ்தான்

 பாகிஸ்தானில்  பஞ்சாப் மாகாணத்தில் வியக்கத்தக்க சம்பவம் ஒன்று நடந்தேறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி  6 சகோதரர்கள் மணமக்கள் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்காமல் 6 சகோதரிகளை திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் மிக எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தில் 100 விருந்தினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.  இந்த திருமணத்தில் எளிமையை கடைப்பிடிக்க மணமகன்கள் விரும்பியுள்ளனர். அவர்களில் மூத்த சகோதரர் “  நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக  இருக்க விரும்பினோம். சில இடங்களில் திருமண செலவுகளுக்காக மக்கள் நிலங்களை விற்கின்றனர். அல்லது கடன் வாங்குகின்றனர். ஆனால், திருமணங்கள் எளிமையானவை என காண்பிக்கவும், தேவையற்ற நிதி நெருக்கடியில் சிக்க வேண்டாம் என எடுத்து காட்டவும்  நாங்கள் முடிவு செய்தோம் எனக் கூறியுள்ளார்.

சமூக நடைமுறைகளுக்கு மாறாக, மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்க அவர்கள் மறுத்து விட்டனர். இந்த திருமணம் அதிக செலவில்லாமல், குறைந்த செலவில் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்காக மணமகன்கள் ஓராண்டாக திட்டமிட்டு வந்தது தெரிகிறது.  ஏனெனில், அவர்களின் இளைய சகோதரன் 18 வயது நிறைவடைந்த பிறகு தான் அனைவரும்  ஒரே நாளில் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்திருந்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web