போதிய பயணிகள் இல்லை... சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து!

 
விமானம்

சென்னையில், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்கள் என இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமானம் விமான நிலையம்

விமானங்களின் வருகையும் குறைந்தளவு பயணிகளின் எண்ணிக்கையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பை, சிங்கப்பூர் செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

விமானம் விமானநிலையம் திருச்சி

வருகை, புறப்பாடு விமானங்களில் பயணம் செய்ய, ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த மிகக் குறைந்தளவிலான பயணிகளுக்கு முன்கூட்டியே விமானம் ரத்து செய்யப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்களின் விமான பயணச்சீட்டுகளும் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?