மானசா தேவி கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக கார்வால் மண்டல ஆணையர் வினய் ஷங்கர் பாண்டே தெரிவித்திருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. திருவிழாவில் மின்கசிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடியதில் நெரிசல் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இன்று ஜூலை 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், பிரபலமான கோவிலின் படிக்கட்டுப் பாதையில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறை-நிர்வாகக் குழு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா, கோவாவில் லைராய் தேவி கோயில், பெங்களூரு RCB பேரணி என அடுத்தடுத்து கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான நிலையில், இன்று ஹரித்வாரில் துயரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
