நின்று கொண்டிருந்த பேருந்து மீது டிரக் மோதி 6 பேர் பலி... டயர் வெடித்ததால் விபரீதம்!
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று அகமதாபாத் வதோரா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிகாலையில் திடீரென டயர் வெடித்ததால் சிகோத்ரா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டது. பேருந்து பழுது பார்க்க நிறுத்தப்பட்டு இருந்ததால் அதில் இருந்த பயணிகள் கீழே இறங்கி பேருந்தின் பின்புறம் பயணிகள் நின்று கொண்டு இருந்தனர்.
#NashikAccident: Tragic Collision on #MumbaiAgraHighway Kills Six, Toll Expected to Rise
— Pune Pulse (@pulse_pune) April 30, 2024
.
.
A bus collided head-on with a truck on the Mumbai-Agra highway at Nashik. According to preliminary information, six people were killed in the accident after being hit by a truck. Given… pic.twitter.com/EUGPmwQgb6
அதே நேரத்தில் அதிகாலை 4.30 மணிக்கு அந்த பக்கமாக வந்த டிரக் பேருந்தின் பின்புறம் மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
மருத்துவ சிகிச்சையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதில் பேருந்து ஓட்டுனரும் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்ச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் எற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
