அடுத்தடுத்து அதிர்ச்சி... சேலத்தில் வெறிநாய் கடித்து 6 பேர் படுகாயம்!

 
நாய்கள்

 தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் பொதுமக்களை கடித்து வைக்கும் போக்கு தொடர்கதையாக உள்ளது. அரசும், மாநகராட்சி ஊழியர்களும் வெறிநாய் கடிக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டும் இது விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே எதிரொலிக்க துவங்கியுள்ளது. 

நாய்க்கடி

இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன.  இன்று காலை நாங்கவள்ளி பகுதியில் இப்படி சுற்றித்திரிந்த நாய்கள் சுமார் 6 பேர் வரை கடித்து படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளது.  தங்கமணி (55) எனும் பெண்ணை தெருநாய் கடித்தது. இதேபோல் சின்னையன் (72), வெங்கடாஜலம் (70), அங்கப்பன்(75), காசி கவுண்டர்(55), இளையபாரதி (17) ஆகியோரையும் நாய் கடித்துக் குதறியுள்ளது.

நாய்
நாய் கடித்து காயம் அடைந்த 6 பேரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாய்களின் தொல்லை அதிகரித்து வருவது குறித்து பல முறை உள்ளாட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் இது விஷயத்தில் ஊழியர்களோ, அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web