வீட்டு அலமாரியில் ரகசிய அறை .... என்கவுண்ட்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

 
ரகசிய அறை

 ஜம்மு காஷ்மீரில்   குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். அங்கே ஒரு வீட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர்.

 ராணுவத்தினரை பார்த்தவுடன் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலடியாக ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.  சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதேபோன்று மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் பாதுகாப்பு படை வீரர் மற்றொருவர்  உயிரிழந்து விட்டார். இந்த என்கவுண்டரில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர். வீட்டிற்குள் இருந்த  ஒரு அலமாரியில் ரகசிய குழி அமைத்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web