சென்னை முழுவதும் மின் தடையை சரிசெய்ய 60 பறக்கும் படைகள்!

 
மின்சாரம்

 கோடைவெயில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொளுத்தி வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்படுவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. வெயில் அதிகரிப்பு காரணமாக அனைவரும் ஏசி அறைக்குள் புகுந்து கொள்கின்றனர். இதனால் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா  மின்சாரத்துறை அதிகாரிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டார். 

மின்சாரம்


இது குறித்து  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “கோடையில் அதிக மின் தேவை  ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது.  இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய சென்னை முழுவதும்  60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரியத்தை அணுகலாம்” எனக் கூறியுள்ளார்.  தமிழ்நாட்டின்  மின் தேவை தினமும்  21000  மெகாவாட் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. மத்திய மின் தொகுப்புகள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் இவைகளிடம் இருந்து  மின்சாரம் வாங்கினாலும்  தினமும்  300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை  ஏற்படுகிறது. அதனை  சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது என மின்சாரவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

சிவதாஸ் மீனா

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்,  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,  இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர்,  பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல்,  ஈரோடு    மாவட்டங்களில் தினமும் ஒரு  மணி  நேரம் முதல் 4 மணி நேரம்  வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web