ரஜினிக்கு எதிரான பேச்சு... 60,000 தமிழர் வாக்குகள்... 3வது முறையாக கரை சேர்வாரா நடிகை ரோஜா!? மே 13 வாக்குப்பதிவு

 
ரோஜா அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

மே 13ம் தேதி வாக்குப்பதிவு.. ரஜினி சந்திரபாபு குறித்து பேசியிருந்த போது, ரஜினிக்கு எதிரான பேச்சு அவரது சொந்த தொகுதியான நகரியிலேயே ரோஜாவுக்கு எதிராக திரும்பியது. நகரியில் 60,000 தமிழர் வாக்குகள் இருக்கும் நிலையில், 3வது முறையாக வெற்றி பெற்று நடிகை ரோஜா ஹாட்ரிக் அடிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு ஆந்திர அரசியலில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் நிலவி வருகிறது. 

ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலோடு 175 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலும் ஒரு கட்டமாக மே 13-ம் தேதி நடக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நகரி தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக போட்டியிடுகிறார் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா. ஏற்கெனவே இரண்டுமுறை தொடர்ச்சியாக நகரி தொகுதியில்  போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள நடிகை ரோஜா, அடுத்த இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கியிருக்கிறார்.

இந்த முறை அரசியல் சதுரங்கம் ரோஜாவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. தொகுதியில் சொந்தக் கட்சியினரே நடிகை ரோஜாவுக்கு எதிராக அணி சேர்ந்திருப்பது, குடும்ப ஆதிக்கம், தொகுதியில் எந்த நலத்திட்டமும் செய்யவில்லை என்கிற கருத்து, நடிகர் ரஜினி குறித்த விமர்சனம் என்று பல விஷயங்கள் நடிகை ரோஜாவுக்கு எதிராக வரிசைகட்டி நிற்கின்றன. நகரி தொகுதியில் மொத்தம் 2,00,000 வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 60,000 வாக்காளர்கள் தமிழர்கள். இவர்களின் வாக்குகளே கூட இந்த முறை ரோஜாவுக்கு எதிராக திரும்ப வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். 

ரோஜா

கடந்த 2014ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரியில் போட்டியிட்டு 858 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறை நடிகை ரோஜாவின் எம்.எல்.ஏ. பயணம் அதிகம் பாராட்டுக்களைப் பெற்றது. எதிர்கட்சி வரிசையில், தெலுங்கு தேசத்தை கடுமையாக விமர்சித்தார்.  மக்கள் ஆதரவு பெருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2019 தேர்தலிலும் மீண்டும் நகரியில் போட்டியிட்டு 2,700 வாக்குகள் வித்தியாசத்தில் தனது 2வது வெற்றியைப் பெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார் ரோஜா. கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாக எதிர்கட்சியை விமர்சித்து, மக்களின் பேரன்பையும், ஆதரவையும் பெற்றிருந்ததால் ஜெகன் மோகன் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, ரோஜாவுக்கு சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 

ரோஜா - நகரி

நடிகை ரோஜாவை விட தொகுதி மக்கள் இது குறித்து அதிகம் சந்தோஷப்பட்டனர். ஆனால், அதன் பின்னர் நிலைமை மாறியது. அமைச்சரான பிறகு நடிகை ரோஜாவின் செயல்பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தொகுதி மக்களைக் கண்டுக்கொள்ளவில்லை என்றும், மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றும் புகார்கள் பறக்க துவங்கின.

இந்நிலையில், நடிகை ரோஜாவுக்கு மீண்டும் சீட்டு கொடுத்தற்கு சொந்தக் கட்சியிலேயே பயங்கர எதிர்ப்புக் கிளம்பியது. தேர்தல் பிரசாரத்திலும் சொந்த கட்சியினர் பலரும் ஆப்செண்ட். உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் நடிகை ரோஜாவுக்கு சீட் கொடுத்த பின்னர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறியது முதல் ஜெகன் மோகன் ரெட்டியையே அதிர்ச்சியடைய செய்தது. இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

நடிகை ரோஜா கட்சியினருக்கு எதுவுமே செய்யவில்லை... கட்சிக்குள் ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி தலையீடும், அவரது சகோதரர்களின் தலையீடும் அதிகமாக இருக்கிறது என்று புகார் கூறி கட்சியினர் சிலர் ராஜினாமா செய்தனர். நடிகை ரோஜாவுக்கு நீங்கள் வாக்களித்தால் நகரியில் சந்திரமுகி வந்துவிடும் என்று எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதல் முறை தனது வாக்குறுதிகளைப் பார்த்து பார்த்து நிறைவேற்றிய ரோஜா, இந்த முறை தனது தேர்தல் வாக்குறுதிகளைக் கண்டுக்கொள்ளவே இல்லை. 

நில அபகரிப்பு, குடும்ப ஆதிக்கம் போன்றவையும் நடிகை ரோஜாவையும், ஆர்.கே. செல்வமணியையும் சராசரி அரசியல்வாதிகளாக பொதுமக்களுக்கு அடையாளம் காட்டியிருப்பதாக சொல்கிறார்கள். யாரும் வரலைன்னாலும் பரவாயில்லை என்று பிரச்சாரத்திலும் இந்த முறை தனது கணவர் ஆர்.கே.செல்வமணியை களமிறக்கி இருக்கிறார். இரண்டு தொடர் தோல்விகள், இரண்டு தொடர் வெற்றிகள் என்று மூன்றாவது தொடர் வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கி இருக்கும் நடிகை ரோஜாவுக்கு எதிராக சதுரங்க காய்கள் தொடர்ந்து நகர்த்தப்படுகின்றன.

சதுரங்க ராணியாக ஜெயிப்பாரா? இல்லைசீட்டுக்கட்டு ராணியாக சறுக்குவாரா என்பது நகரியின் 60,000 தமிழர்களின் வாக்குகளில் இருக்கிறது. ஏனெனில், 2 லட்சம் வாக்காளர்களில் நடிகை ரோஜாவின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது இந்த 60,000 தமிழர்களின் வாக்குகள் தான். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web