அரியலூரில் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை கண்டெடுப்பு!!

 
டைனோசர் டைனோசர்

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினங்களின் தடயங்கள் இன்று வரை பல இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக ஜிம்பாப்வேயில் 230 மில்லியன் ஆண்டுகள் பழமையான “எம்பிரேசரஸ் ராத்தி” என்ற டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது விஞ்ஞான உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதே போல் தமிழகத்தின் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களும் தொன்மையான கடல் உயிரினங்களின் படிவங்களுக்குப் பிரசித்தமான பகுதிகளாகும்.

டைனோசர்

அரியலூர் சுரங்கப் பகுதிகளில் சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் அடிக்கடி கிடைத்துள்ளன. 1980-85 காலகட்டத்தில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன சுரங்கத்தில் கிடைத்த முட்டை வடிவிலான பாறை, 1996ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் “டைட்டனோசரஸ்” வகை தாவர உண்ணி டைனோசரின் முட்டை என உறுதிசெய்யப்பட்டது.

சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆற்றின் கரையில் வைக்கப்பட்ட இந்த முட்டை, காலப்போக்கில் கடலடியில் புதைந்து இன்று வரை சிதையாமல் கிடைத்திருக்கிறது என்பது உண்மையில் வியப்பூட்டும் தகவல்.

அரியலூர்

இந்த அரிய டைனோசர் முட்டை தற்போது வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அரியலூரிலிருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வரலாற்றுச் சின்னத்தை நேரில் கண்டு ரசித்து வருகிறார்கள். பூமி இன்னும் பல ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்தது என்பதை இது மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!