தமிழகத்திற்கு ரூ.682 கோடி நிதி... மிக்ஜாம் புயலுக்கு ரூ.285 கோடி, தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு!

 
நிர்மலா சீதாராமன்
 

கடந்த 2023ல் சென்னையிலும், சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மிக்ஜாம் புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல் வருட கடைசியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 
இந்நிலையில், மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. 

மிக்ஜாம் புயல்


வெள்ள பாதிப்பு நிவாரணம் மற்றும் சேதங்களை சீர் செய்ய மத்திய அரசிடம் சுமார்  ரூ.37,000 கோடி வழங்கும்படி தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால் மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு புயல் நிவாரண நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும் இந்த கோரிக்கைகள் மிக முக்கிய பிரச்சினையாக அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனிடையே கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக 3,454 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web