ஒரே வாரத்தில் 69 பேர் கைது... பயந்தோடும் சமூக விரோதிகள்... சாதித்து காட்டுவாரா சத்யப்ரியா?!

 
சத்யப்ரியா சத்யபிரியா

திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி, மதுவிலக்கு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில், பொது இடங்களில் கஞ்சா உட்பட போதை பொருட்களை விற்பனை செய்த 6 நபர்கள் மீது எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், திருச்சி கேகே நகர் காவல் நிலையத்தில் 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி நீதிமன்றம்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை அம்பலப்படுத்தியதாக தனியார் தொலைக்காட்சி செய்தியைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 15 நபர்கள் மீது திருச்சி கன்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம், பாலக்கரை காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும், அமர்வு நீதிமன்றம், எடமலைப்பட்டி புதூர், பொன்மலை, காந்தி மார்க்கெட், உறையூர் ஆகிய காவல் நிலையங்களில் தலா 1 வழக்கு உட்பட 11 லாட்டரி  சீட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 15 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 139 துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.6380 பணத்தை கைப்பற்றி, குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில் விற்பனை செய்ததாக 48 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 402 மதுபாட்டில்கள் (மதிப்பு சுமார் ரூ.55,000) கைப்பற்றி, குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தண்டவாளம் ரயில்

திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி போலீஸ் கமிஷ்னர் சத்ய ப்ரியா  தெரிவித்துள்ளார். 

எல்லா நடவடிக்கையும் சரி... இதே போல கவனத்தை போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்து கடைகளையும் கண்டு பிடித்து அவற்றையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். சாதித்துக் காட்டுவாரா சத்ய ப்ரியா?!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web