இமாச்சலில் மேகவெடிப்பால் 69 பேர் பலி!

இமாச்சல பிரதேசத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு தொடர் கனமழை பெய்து வருகிறது. பல நேரங்களில் கிளவுட் பர்ஸ்ட் எனப்படும் மேகவெடிப்பு மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் மாயமாகியுள்ளன. மண்டி மாவட்டத்தில் மட்டும் 37 பேர்
உயிரிழந்துள்ளனர். மண்டியில் மட்டும் ரூ.400 கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை, ஆற்றில் வெள்ளம், நிலச்சரிவு இவைகளால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மழை, வெள்ளத்தில் சிக்கி 110 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் வலைதள பதிவில் இந்தியாவின் பல மாநிலங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுடன் பேசினேன். மக்களுக்கு உதவ போதிய எண்ணிக்கையிலான தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மாநிலங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்திய அரசிடம் இருந்து அளிக்கப்படும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்தேன் என அமித்ஷா கூறியுள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜூலை 7ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அங்கு பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14 இடங்களில் மழை, வெள்ளத்தால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 164 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!