அடுத்த அதிர்ச்சி... ஜூலை 1 முதல் 6% மின் கட்டணம் உயர்வு!

 
மின் கட்டணம்

 மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின் ஒவ்வொரு அதிர்ச்சியாக  அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில்  ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கொளுத்திய வெயிலால் வீடுகளில் மின்கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் விழி பிதுங்கியுள்ளனர்.

மின்சாரம் eb

தற்போது இந்த திடீர் அறிவிப்பால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில்  மின்வாரியம் 1.60 லட்சம் கோடி கடனுடன் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடந்த 2022-23 ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதன்படி அடுத்த மாதம் 6 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது.  இந்த தகவல் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web