இல.கணேசன் மறைவுக்கு 7 நாட்கள் அரசுமுறை துக்கம்!
நாகாலாந்து மாநில கவர்னராக இருந்து வந்தவர் இல.கணேசன்.இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு வயது 80. இவர் பல நாட்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி கால் மரத்துப்போன நிலையில் வீட்டில் மயங்கி விழுந்தநிலையில் இல.கணேசனை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது உடல் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாகாலாந்து கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22ம்தேதி வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும் 7 நாட்கள் அரசு முறை துக்கம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நாகாலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படப்பட்டுள்ளது. மாநில அரசுத் துறைகளால் எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என நாகாலாந்து அரசு அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
