சம்மர்ல செம கூல்... தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை!

 
இடி மின்னல் மழை

 

தமிழகம்  முழுவதும் வெப்ப அலையின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பகல் முழுவதும் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகள், இணைநோய் இருப்பவர்கள் முதியவர்கள் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.  சில மாவட்டங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி  வெயில் கொளுத்துகிறது.

 

வெயில் , மழை
மே 4முதல்  அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில்   சேலம், காஞ்சீபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர்  மாவட்டங்களில் மிகக் கடுமையான வெயில் காணப்படுகிறது.இந்நிலையில்  தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலைக்கான  'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 10ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி முதல் 7 டிகிரி வரை அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

துபாய் மழை
 அதே சமயம் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.  குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்  மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து  நாளை மே 8ம் தேதி புதன்கிழமை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!


 

From around the web