7 மீனவர்கள் சிறைப்பிடிப்பு... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் !

 
மீனவர்கள்


 
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்துள்ளது. அத்துடன் ஒரு படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இதனை கண்டித்து மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  நேற்று 356 விசைப்படகுகளில் ராமேஸ்வரம்  மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள்

பிற்பகலில் இவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.  தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இருதய டிக்சனின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். படகில் இருந்த மீனவர்கள் டல்லஸ்(56), பாஸ்கரன்(45), ஆரோக்கிய சான்டிரின்(20), சிலைடன்(26), ஜேசுராஜா(33), அருள்ராபர்ட்(53), லொய்லன்(45) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். 

மீனவர்கள் போராட்டம்
இதற்கிடையில் 7 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம்  அரசு மருத்துவமனை முன்பு மீனவர்கள், உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?