இந்தியாவில் 7 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை...பயனர்கள் அதிர்ச்சி!

 
வாட்ஸ்-அப்

 இந்தியாவில் மார்ச் மாதத்தில் மட்டும் 71 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்யப்பட்டு இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த மாதம் 11 பதிவுகள் “நடவடிக்கை”யுடன் 12,782 புகார்களையும் பதிவு செய்தது. அதே போல் உள்ளூர் சட்டவிதிகளை மீறியதாக  இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் 7.1 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 7,182,000 தடைசெய்யப்பட்ட கணக்குகளில், 1,302,000 கணக்குகள் எந்தவொரு பயனர் அறிக்கைக்கும் முன்பே  தடுக்கப்பட்டுவிட்டன  என ஒரு அறிக்கை கூறுகிறது. 

வாட்ஸ் அப்
இந்தியாவில் 550 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெஜேசிங் தளம், ஏப்ரல் மாதத்தில் 10,554 பயனர்களிடமிருந்து புகார்களை பெற்றுள்ளது. அதில் 6 புகார்கள் மட்டுமே இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது.   இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் “நாங்கள் எங்கள் வேலையில் வெளிப்படைத்தன்மையுடன் தொடர்வோம் மற்றும் எதிர்கால அறிக்கைகளில் எங்கள் முயற்சிகள் பற்றிய தகவல்களைச் சேர்ப்போம்” என தெரிவித்துள்ளது. அதன் தனியுரிமை விதிகளை மீறும் பயனர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக வாட்ஸ்அப் தளம் மீண்டும் தெரிவித்துள்ளது.   மார்ச் மாதத்தில் இந்தியாவில் 7.9 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை WhatsApp தடை செய்துள்ளது. அந்த மாதம் 11 பதிவுகள் நடவடிக்கையுடன் 12,782 புகார் அறிக்கைகளைப் பதிவு செய்தது.  இந்த முயற்சிகளை மேற்பார்வையிட பல்வேறு பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சட்ட அமலாக்கம், ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் இவைகளில் வல்லுநர்களைக் கொண்டுள்ளது.

வாட்ஸ் அப்
“பயனர்கள் தொடர்புகளைத் தடுக்கவும், பிரச்சனைகளின்  உள்ளடக்கம் மற்றும் தொடர்புகளை பயன்பாட்டிற்குள் இருந்து எங்களிடம் புகார் அளிக்கவும் நாங்கள் உதவி செய்கிறோம். பயனர் கருத்துகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தவறான தகவல்களைத் தடுப்பது, இணைய பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் தேர்தல் நேர்மையைப் பாதுகாப்பதில் நிபுணர்களுடன் ஈடுபடுகிறோம்” என WhatsApp தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web