டிப்பர் லாரி , கார் மீது மோதி ஒரு குழந்தை உட்பட 7 பேர் பலி!
ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, எதிரே வந்த கார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி துடிதுடித்து பலியாகினர். ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே டிப்பர் லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மணல் ஏற்றி வந்த லாரி தவறான பாதையில் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ''இந்த சம்பவம் தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
