3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய 7 பேர்?
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை காலை திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்தது.இதனால், கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்ற தகவலின் பேரில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
