7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்!

 
7 மாடி தீவிபத்து

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோர தீவிபத்தில் கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த தீ மெல்ல மெல்ல அதிகரித்து அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பரவ தொடங்கியது. தீப்பிடித்த கட்டிடமே சிறிது நேரத்தில்  இடிந்து விழுந்தது


. கட்டிடத்தின் மேல் தள சுவர் முழுவதும் சாய்ந்து கீழே தெருவில் சிதறியதில்  வாகனம் ஒன்று  தீயில் கருகியது. இந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 மாடி

இதனால் சென்ட்ரல் ஸ்டேசனிற்கு பின்னால் உள்ள கட்டிடம் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. தற்போது 100க்கும் மேற்பட்ட தீயணைப்புபடைவீரர்களும் 20க்கும்மேற்பட்ட தீயணைப்பு படைவாகனங்களும் தீயை கட்டுப்படுத்த  போராடி வருகின்றனர்.  ஒரு கட்டிடம் தீவிபத்தில் சிக்கியிருந்தது என்றாலும் தீ அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவ தொடங்கி விட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web