பகீர்... தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 தொழிலாளர்கள் படுகொலை!

 
பயங்கரவாதிகள்

நேற்று இரவு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குவாதரின் சர்பந்தில் உள்ள மீன் துறைமுக ஜெட்டி அருகே குடியிருப்புகள் மீது  பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இவர்கள் அனைவரும் பஞ்சாபின் சாஹிவால் பகுதியில் வசித்து வருபவர்கள். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவம் குறித்து  போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

போலீசார்


மே 1 அன்று, பஞ்சாபின் தவுன்சா ஷெரீப் மாவட்டத்தில் உள்ள போலீஸ் செக்போஸ்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 போலீசார் காயமடைந்தனர் கடந்த 2  மாதங்களுக்குள் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட 2 வது தாக்குதல் சம்பவம் இது என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். இவர்களின் கூற்றுப்படி  வஹோவா, டேரா காஜி கானில் அமைந்துள்ள ஜாங்கி செக்போஸ்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 6 பேர் படுகாயம்  அடைந்தனர் படுகாயம் அடைந்த 7 போலீசார்   தவுன்சா ஷெரீப் THQ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  


கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் லேசர்-லைட் துப்பாக்கிகளுடன் சுமார் 20 பயங்கரவாதிகள் சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்தியதாக உயர் அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பயங்கரவாதிகள் இருளின் மறைவில் பல்வேறு திசைகளில் இருந்து   தாக்குதலைத் தொடங்கினர்.திடீரென அவர்களின்  வெடிமருந்துகள் தீர்ந்ததால் பின்வாங்கினர் எனவும் கூறப்படுகிறது.   பயங்கரவாதிகள் போலீஸ் செக்போஸ்ட்டை கைப்பற்றி, காவலர்களை சிறைபிடிக்க விரும்புகின்றனர்.  இந்தத் தாக்குதல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும், அமலாக்கப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தாக்குதலுக்குப் பிறகு, அருகில் உள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, பயங்கரவாதிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web