உஷார்... வீடுகளில் கிளி , மயில் வளர்ப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை, ரூ 10000 அபராதம்!

 
கிளி

 இந்தியா முழுவதும் காணப்படும்  1364 வகையான பறவை இனங்களில்  194 வகை பறவை இனங்கள் உலக அளவில் அழியும் நிலையில் உள்ளன. இவைகளை பாதுகாக்க  மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து பறவைகளைக் கொண்டு வந்து வளர்ப்பவர்கள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன  அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களை வணிக நோக்கில் வளர்ப்பவர்கள் இனப்பெருக்கம் செய்து விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட சில வகையான பறவைகளை மட்டுமே வீடுகளில் வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கிளி

வளர்ப்பு பிராணிகள் குறித்த விபரங்களை உடனடியாக மக்கள்  தமிழக அரசுக்கு  தெரியப்படுத்த வேண்டும். வீடுகளில் பறவைகளை வளர்ப்பவர்கள்  முறைப்படி   பதிவு செய்ய வேண்டியது அவசியம். பதிவு செய்த பின் பறவைகளை அடையாளப்படுத்துவதற்கு அதன் கால்களில் மாற்றுவதற்கான வளையங்கள் வழங்கப்படும். வீடுகளில் இந்த பறவைகளை வளர்க்க வீடுகளில் இடவசதி, உணவு , தண்ணீர் வழங்கும் வழிமுறைகளும்  வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி தடை செய்யப்பட்ட பறவைகளை வீடுகளில் வளர்க்க அனுமதி கிடையாது. விதி மீறலில் ஈடுபடுவோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத அளவு  வழக்கு பதிவு செய்யப்படும் .3 முதல் 7 ஆண்டுகள் வரை  சிறைத் தண்டனையும் ரூ10000  அபராதமும் விதிக்கப்படும் என தமிழக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   கிளி மற்றும் மயில் போன்ற பறவைகளை வீடுகளில்  வளர்ப்பவர்களுக்கு இது பொருந்தும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!