இம்ரான் கானை விடுவிக்க கோரி போராட்டம்... தெரீக்-இ-இன்சாப் கட்சியினர் 700 பேர் கைது!

 
இம்ரான்கான்
 

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்க கோரி நேற்று போராட்டம் நடத்திய தெரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆண்டுஆகஸ்ட் 5ம் தேதி முதல் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுவிக்க வலியுறுத்தி அவரது கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டமும் அந்நாட்டில் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

இம்ரான்கான்

இம்ரான் கானை, சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும், விலைவாசியை கட்டுப்படுத்தக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் போராட்டங்களால் பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

இம்ரான்கான்

மேலும், "இனிமேலும் காத்திருக்க மாட்டோம், பொறுமையாக இருக்க மாட்டோம். எங்களை கட்டுப்படுத்த முடியாது. நாட்டிற்காக போராட தயாராக உள்ளோம். வெற்றியோ அல்லது தோல்வியோ எங்கள் போராட்டத்தை வலுப்படுத்துவோம்" என்று இம்ரான் கான் கட்சியின் நிர்வாகிகள் கூறினர்.  இதனால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!