அதிர்ச்சி... கொரோனாவால் 4 நாட்களில் ஒரே மருத்துவமனையில் 74 நோயாளிகள் உயிரிழப்பு!

 
மருத்துவமனை


 
இந்தியாவில் மீண்டும் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவ விஞ்ஞானிகள் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவா மாநிலத்தின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் சிகிச்சை பெற்ற 74 பேர் மரணம் அடைந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

குறிப்பிட்ட மருத்துவமனையில் கடந்த செவ்வாயில்  26 பேரும், புதன்கிழமை 20 பேரும், வியாழக்கிழமை 15 பேரும், வெள்ளிக்கிழமை  13 பேர் என மொத்தமாக 74 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து பாம்பே உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை  மாநிலத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்திருந்தது.  

கோவா மருத்துவமனை

கோவா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா பாதிப்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 48.1 சதவிகிதம் பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த விகிதம் இந்தியாவிலேயே மிக அதிகமாக பதிவாகியுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web