பிரேசில் பெருமழை வெள்ளத்தில் 78 பேர் பலி... 105 பேர் மாயம்!

 
பிரேசில்

 பிரேசிலில் தொடர் கனமழை காரணமாக 78 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில்  தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 78 ஆக உயர்ந்திருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் கனமழை காரணமாக சுமார்  115,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா நேற்று காலை ரியோ கிராண்டே டோ சுலுக்கு தனது அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்களுடன் உள்ளூர் அதிகாரிகளுடன் மீட்பு மற்றும் புனரமைப்பு முயற்சிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  "இது ஒரு போர் சூழ்நிலையாக கொள்ளப்பட்டு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்  என மாநில ஆளுநர் எட்வர்டோ லைட் கூறியுள்ளார். படகுகள், ஜெட் ஸ்கைஸ்  மற்றும் நீச்சல் தெரிந்தவர்கள்,  தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

பிரேசில்

ஜெட் ஸ்கைஸைப் பயன்படுத்தி, நகரின் ஒரு பகுதியான தீவுகளில்   வெள்ள நீரில் இருந்து சுமார் 50 பேர் வரை காப்பாற்றப்பட்டுள்ளனர்.  எந்த திசையில் திரும்பினாலும் நம் காதுகளுக்குள் உதவி உதவி என்ற குரல் ஒலித்த வண்ணம் உள்ளது.   நேற்று மே 5ம் தேதி மட்டும் ஒரே நாளில் ஞாயிற்றுக்கிழமை 105 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால்  இறப்பு எண்ணிக்கை இன்னும் கணிசமாக அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web