இரண்டாம் உலகப்போர் முடிந்த 79 வது நினைவு தினம்... வீரர்களுக்கு அஞ்சலி!

 
பிரான்ஸ்
 

இரண்டாம் உலகப் போர் முடிந்ததன் 79-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் இந்தியா மற்றும் பிரான்சு அரசாங்கத்தின் சார்பில்  அஞ்சலி செலுத்தப்பட்டது

இரண்டாம் உலகப்போர் நேச நாடுகளுக்கும், அச்சு நாடுகளுக்கும் இடையில் 1939–45 காலகட்டத்தில் நடைபெற்ற மிகப்பெரிய உலகப் போர் ஆகும், அனைத்து உலக வல்லமை பெற்ற நாடுகளில் பெரும்பாலானவை இதில் பங்கெடுத்தன.  இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர்.  இந்தப்போரில் விமானங்கள் மூலம் மக்கள் தொகை மிகுந்த மையங்கள் மீது குண்டுகள் மற்றும் அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதால் 7 முதல் 8.5 கோடிப் பேர் இதில் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி

மனிதப்பேரழிவை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போர் முடிந்ததின் 79-வது ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர் வீரர் நினைவு சின்னத்தில் இரண்டாம் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தேர்வெழுத தடுப்பூசி கட்டாயம் ! புதுச்சேரி அரசு அதிரடி!

இதில் இந்தியா மற்றும் பிரான்சு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  பிரெஞ்சு துணைத்தூதர் துனைத் தூதர்  ஜீன்-பிலிப் ஹூதர்,  மற்றும் புதுச்சேரி அரசு சார்பிலும், துணை நிலை ஆளுநர் சார்பில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு போர் வீரர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பிரெஞ்ச் முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web