அதிர்ச்சி... ஏறுவதற்குள் பேருந்தை இயக்கியதால் 7ம் வகுப்பு மாணவி மரணம்!

 
விபிஷா
 

தமிழகத்தில் அரசு பேருந்துகளின் தரம் பல மாவட்டங்களில் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருவது ஒரு புறம் இருந்து வரும் நிலையில், பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பொதுமக்களின் நண்பர்களாக இல்லாமல் பல இடங்களில் அடாவடித்தனம் செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் போது பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாதது, பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அவர்களை அலட்சியமாக நடத்தும் போக்கு என்று பொதுமக்களிடையே பல இடங்களில் அதிருப்தி நிலவி வருகிறது. 

ஆம்புலன்ஸ்
இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பேருந்தில் 7ம் வகுப்பு பயின்று வந்த மாணவி விபிக்ஷா ஏறுவதற்குள் பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் பரிதாபமாக தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வால்ராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மரிய அலெக்ஸ் என்பவரது மகள் விபிக்ஷா அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். 

போலீஸ்
இந்நிலையில் விபிக்ஷா பள்ளிக்கு சென்றபோது, அரசுப் பேருந்தில் ஏறியபோது, பேருந்து ஓட்டுநர் அதனை கவனிக்காமல் வேகமாகப் பேருந்தை இயக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி விபிக்ஷா படுகாயமடைந்தார்.இதையடுத்து அங்கிருந்தவர்கள், மாணவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web