பகீர்... மனைவிக்கு போதை டீ கொடுத்து 8 பேர் கூட்டு பலாத்காரம்... மாமனார், மைத்துனர் மீது வழக்குப்பதிவு!

 
தேநீர்


ராஜஸ்தான் மாநிலத்தில், மனைவிக்கு தேநீரில் போதைப்பொருள் கலந்து கொடுத்து, டீ குடிக்க வைத்து 8 பேர் பலாத்காரம் செய்ததாக மாமனார் மற்றும் மைத்துனர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், சுரு மாவட்டத்தில் கடந்த  சனிக்கிழமையன்று பகீர் சம்பவம் ஒன்று வெளியாகி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில், திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் அந்நியர்களுடன் உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்ததாகவும், தனது மாமியார் மற்றும் மைத்துனரால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தேநீர்


இது தொடர்பாக சுரு மாவட்டத்தின் சந்த்வா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் அளித்துள்ள தகவலின்படி, சாண்ட்வா காவல்நிலைய பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்திருக்கும் புகார் மனுவில், தனக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருப்பதாகவும், தேநீரில் போதைப் பொருளைக் கலந்து கொடுத்து அந்நியர்களுடன் உடல் உறவில் ஈடுபடும்படி அவளது கணவர் வற்புறுத்தியதாகவும், அதே சமயம் இதை எதிர்த்ததால், தன்னைக் கணவன் கடுமையாக அடித்து துன்புறுத்துவதாகவும், தனது மாமனார், மைத்துனர் உள்ளிட்ட 8 பேர் தன்னை பலாத்காரம் செய்துள்ளதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டி அதிரவைத்திருக்கிறார். 

பாலியல் வன்கொடுமை


இவர்கள் அனைவரும் கடந்த 5 ஆண்டுகளாக தேநீரில் போதைப்பொருள் கொடுத்து தன்னைத் தொடர்ந்து பலாத்காரம் செய்து வருவதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். அதே சமயம் இதை எதிர்க்கும் போது கடுமையாக தாக்கியுள்ளனர். 
தற்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சேர்ந்து தனது சகோதரனை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருவதாக அந்த பெண் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார். தனது குழந்தைகளும் தனது சகோதரருடன் இருப்பதாகவும், எனவே தனது சகோதரருக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது புகாரை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web