8.19% வாக்குகள்... மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி!

 
8.19% வாக்குகள்...  மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி! 

தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது.

தேர்தல் திருவிழா க்ளைமேக்ஸ் பகுதிக்கு வந்தடைந்திருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் நிதானத்திற்கு வந்திருக்கின்றனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் யார் சாமர்த்தியசாலி? புத்திசாலித்தனமாக காய் நகர்த்தப்போவது யார்? அரியணை யாருக்கு? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இன்று விடை தெரியும்.

கட்சி துவங்கியதில் இருந்தே கூட்டணி தவிர்த்து தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி  இந்த முறையும் தனித்தே களமிறங்கியது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பல தொகுதிகளில் இம்முறையும் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்தது நாம் தமிழர். 12 தொகுதிகளில் 1,00,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 8 சதவீத வாக்குகளை நெருங்கியிருப்பதால், இம்முறை நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், தூத்துக்குடி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய 12 தொகுதிகளில் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் 1,63,412 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதேபோல ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகை, திருச்சி மற்றும் புதுச்சேரி  ஆகிய 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ம் இடத்தை பிடித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் நாதக 3ம் இடம் பிடித்தது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8 சதவீத வாக்குகள் தேவைப்படும் நிலையில், 8.19 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web