செம மாஸ்... 82 வயது பாட்டி பளு தூக்கும் போட்டியில் சாதனை!

 
கிட்டம்மாள்

 கற்றுக் கொள்ளவும், சாதிக்கவும் வயது ஒரு தடையில்லை என்பதை 82 வயது பாட்டி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். பொள்ளாச்சியில்   பளுதூக்கும் போட்டியில் 82 வயது பாட்டி கிட்டம்மாள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி  வெங்கட்ராமன் மனைவி கிட்டம்மாள். இவர் தனது மகன் மற்றும் பேரன்களோடு வசித்து வருகிறார். பேரன்கள் ரோகித் மற்றும் ரித்திக்   இருவரும் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை பார்த்து பார்த்து பாட்டியும் தினமும் பேரன்களுடன் பயிற்சி பெற ஆரம்பித்தார். வார இறுதி நாட்களில் பேரன்களுடன் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்ற அவர், அங்கு பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.  


பாட்டியின் ஆர்வத்தை பார்த்து  பயிற்சியாளர் சதீஷ், அவரை தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள  அறிவுறுத்தியுள்ளார். சமீபத்தில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சார்பில் நடத்தப்பட்ட பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில், கிட்டம்மாள் முதல் முயற்சியிலேயே 50 கிலோ எடையை தூக்கி 5ம் இடத்தை பிடித்தார்.  அவரது சாதனைகளை பாராட்டி தென்னிந்தியாவின் வலுவான மனிதர்  பட்டமும் கிட்டம்மாளுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.  

கிட்டம்மாள்


கிட்டம்மாள், தனது உடல் ஆரோக்கியம் மேம்பட  கம்பங்கூழ், காய்கறி சூப், பேரிச்சம்பழம் இவைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.  இளம் தலைமுறையினர்  துரித உணவுகளை தவிர்த்தால் சாதிக்க முடியும் என பாட்டியின்  பயிற்சியாளர் சதீஷ் அறிவுறுத்தினார். கிட்டம்மாள் பாட்டிக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web