8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. 30 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி!

 
முஹம்மது தாலுக்தார்

கிழக்கு லண்டனில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 30 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கிழக்கு லண்டனில் உள்ள பேலன்ஸ் தெருவைச் சேர்ந்த முஹம்மது தாலுக்தார், 51, ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1990 களில், கிழக்கு லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸில் 8 வயது சிறுமியை அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்தினார்.

ஆனால் 2020ல் தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து நடந்த விசாரணையில், சாட்சிகளின் மொழி மற்றும் டிஎன்ஏ ஆதாரம் இல்லாமல் அதிகாரிகள் திணறினர். இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணையை நீட்டித்துள்ளனர்.

அப்போது என்ன நடந்தது என்பதை மருத்துவ ஆதாரங்களையும் சேகரித்து உறுதி செய்துள்ளனர். தவிர, பாதிக்கப்பட்ட பெண் தான் அனுபவித்த உளவியல் ஆலோசனை அமர்வுகளின் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் அனுமதி அளித்தார்.இதையடுத்து கைது செய்யப்பட்ட தாலுக்தார், தீவிர விசாரணைக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை வழிநடத்திய அதிகாரி பால் ஹாவ்தோர்ன், விசாரணை முழுவதும் பாதிக்கப்பட்டவரின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும் என்றும், இதுபோன்ற பயங்கரமான துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேச பயப்படும் மற்றவர்களுக்கு இந்த வழக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

மேலும், பாதிக்கப்பட்டவரின் சார்பாக நீதியைப் பெறுவதற்கு அதிகாரிகள் உண்மையான உறுதியைக் காட்டினர். பால் ஹாவ்தோர்ன் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார். இந்த வழக்கில் தாலுக்தார் மூன்று கற்பழிப்பு வழக்குகள் மற்றும் நான்கு துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றம் கடந்த மே 31ம் தேதி தீர்ப்பளித்தது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web