தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

 
40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் ...டிஐஜி  திடீர் உத்தரவு.!
 

தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பணியிட மாற்றம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமனம். அதே போன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அனிஷா உசேன் நியமனம்.
சென்னை கிழக்கு இணை ஆணையர் விஜயகுமார் பணியிட மாற்றம். கிழக்கு காவல்துறை இணை ஆணையராக பண்டி கங்காதர் நியமனம்

சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையராக விஜயகுமார் நியமனம்
சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு வடக்கு இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்

பணியிட மாற்றம்

சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக சுகாஷினி ஐபிஎஸ் நியமனம்
காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை குற்றப்பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக பி.எச்.ஷாஜிதா நியமனம்.
கோவை காவல் தலைமையக துணை கமிஷனராக திவ்யா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?