90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்... 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!

மத்திய பிரதேச மாநிலத்தில் வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரத்தில் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பால கட்டுமான ஒப்பந்த நிறுவனமும் கறுப்புபட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் ஆயிஷ்பாஹ் பகுதியில் புதிதாக ஒரு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம், புதிய போபால் நகரின் மகமாய் கா பாஹ் மற்றும் புஷ்பா நகர் பகுதிகளை இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த பால கட்டுமானம் இப்போது விமர்சனம் மற்றும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
பொதுவாக பாலங்கள் சீரான ஏற்ற இறக்கத்துடன், வாகனங்கள் திரும்ப உகந்த வளைவுடன் அமைக்கப்படும். ஆனால் ஆயிஷ்பாஹ் பாலம், வளைவு இல்லாமல் 90 டிகிரி திருப்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.
இதையடுத்து மாநில முதல்-அமைச்சர் மோகன் யாதவ் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் 2 மூத்த பொறியாளர்கள் உள்பட 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மற்றொரு பொறியாளர் ஓய்வு பெற்ற முதுநிலை மேற்பார்வை பொறியாளர் ஆவார். அவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. மேலும் பால கட்டுமான ஒப்பந்த நிறுவனமும் கறுப்புபட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!