அவ கஷ்டப்படறத பாக்க முடியல... மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த 90வயது முதியவர்!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிவிளையில் வசித்து வருபவர் 90 வயது சந்திரபோஸ். இவர் பனை ஏறும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி 85 வயது லட்சுமி. இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இதில் லட்சுமிக்கு சர்க்கரை நோய் .இதனால் மிகக் கடுமையாக அவதிபட்டு வந்த லட்சுமி கடந்த சில மாதங்களாகவே படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வரை தானே உழைத்து மனைவியை சந்திரபோஸ் பராமரித்து வந்த நிலையில் அவருக்கும் கண்பார்வை மங்கிவிட்டது. உடலும் ஒத்துழைக்கவில்லை. இவர்களுக்கு மாதம் ஒரு மகன் வீதம் இவர்களுக்கு உணவு வழங்கி வந்தனர். வயது மூப்பு காரணமாக அவருக்கு கண்பார்வை முற்றிலும் மங்கிய நிலையில் மனைவியை சரிவர பராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
லட்சுமி படுத்த படுக்கையாகவே கிடந்ததால் முதுகுப்பகுதியில் புண்கள் ஏற்பட்டு வேதனையில் அரற்றியபடியே கிடந்தார். மனைவி தன் கண்முன்பே கஷ்டபடுவதையும், அவருக்கு தன்னால் உதவிசெய்ய முடியவில்லையே என்ற ஆற்றாமையாலும் மிகவும் வேதனை அடைந்த சந்திரபோஸ் மனதை கல்லாக்கிக்கொண்டு ஒரு முடிவு எடுத்தார். அதன்படி கையில் கத்தியை எடுத்துக்கொண்டு தடவிய படியே மனைவியின் கழுத்தை அடையாளம் கண்டு கண் கலங்கியபடியே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதே கத்தியால் தானும் தற்கொலை செய்ய அழுதுகொண்டே வாசலில் அமர்ந்துள்ளார்.
தற்செயலாக அங்கு வந்த அவரது மகன்களில் ஒருவரான சாந்தகுமார் தன் தாய் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயத்துடன் காணப்பட்ட சந்திரபோஸை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சந்திரபோஸ் அழுதுகொண்டே எனக்கு வாழ்க்கை முழுவதும் உறுதுணையாக இருந்த மனைவி வேதனையால் துடித்துக்கொண்டு, சத்தம்போட்டுக்கொண்டே இருந்ததை தாங்க முடியல. அவர என்னால சரியாக பாத்துக்கவும் முடியல. வேறு வழி தெரியாம தான் தாங்க முடியாத மனவருத்தத்தில் அவரின் கழுத்து அறுத்து கொலை செய்தேன்" என சந்திரபோஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவியை கவனிக்க முடியாத சோகத்தில் கருணை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ