932 படங்கள்... மிகப் பெரும் ஆளுமை... 'நீயா’ புகழ் நடிகர் சந்திரமோகன் காலமானார்!
தெலுங்கு திரையுலகின்மிக பெரும் ஆளுமை, நடிகர் சந்திரமோகன் இன்று காலமானார். சுமார் 932 படஙக்ளில் நடித்துள்ளார் சந்திரமோகன். நடிகை ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த, ‘நீயா’ படத்தில் இச்சாதாரி பாம்பாக நடித்தவர் சந்திரமோகன். சமீபத்தில் மறைந்த சரத்பாபுவுக்கு மருத்துவமனையில் உடனிருந்து பல உதவிகள் செய்து வந்தார்.
ஹைதராபாத்தில் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த நடிகரான சந்திரமோகன், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார்.
பல படங்களில் கதாநாயகனாக கலக்கியவர் சமீபத்தில் ‘பாட்ஷா’, ‘பொடுகாடு’ போன்ற படங்களிலும் நடித்தார். 82 வயதாகும் சந்திரமோகன் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 9.45 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
எம்ஜிஆர் நடிப்பில் வெளிந்த ‘நாளை நமதே’ படத்தில் அவரது தம்பியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றவர் சந்திரமோகன். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர் இதுவரை கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான படங்களில் நடித்தார்.
திங்கள்கிழமை ஹைதராபாத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!