இன்று 95 ரயில்கள் ரத்து!! பயணிகள் கடும் அவதி!!

 
ஒடிசா

ஒடிசா மாநிலத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு சரக்குரயிலுடன் அடுத்தடுத்து மோதி  கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒடிசா விபத்து

இந்த  சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன்  இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் பயணிக்கும் 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 96 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 46 ரயில்கள் வேறு பகுதி வழியாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒடிசா முதல்வர்

இந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தேவையான உதவிகளைச் செய்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஒடிசா சென்றுள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web