வடக்கே கொளுத்துது... சுட்டெரிக்கும் வெயிலில் 3 நாட்களில் 98 பேர் பலி.. ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

 
தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்! பொதுமக்கள் அவதி!

தமிழகத்தில் கடந்த சில தினக்களாக வெய்யிலின் தாக்கம் குறைந்து  மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து, பூமியைக் குளிர செய்துள்ள நிலையில், வட இந்தியாவில் நாளுக்கு நாள் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதீத வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் வெப்பக்காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். நண்பகல் நேரங்களில் மக்கள் வீடுகளில் தஞ்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வட இந்தியாவில் நிலவி வரும் அதீத வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 54 பேரும், பீகாரில் 44 பேரும் என மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

Heat wave

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் ஜூன் 15-17 தேதிகளில் தீவிர வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமார் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதை கடந்தவர்கள் என அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோர் மாரடைப்பு, மூளை நரம்பு அடைப்பு, வயிற்று போக்கு ஆகிய பிரச்சனைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இந்த பகுதிகளில் வழக்கத்தை விட 4.7 டிகிரி வெப்பம் கூடுதலாக இருந்துள்ளது. அதேபோல பீகாரிலும் தீவிர வெப்பம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 44 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

Heat wave

அம்மாநில தலைநகர் பட்னாவில் மட்டும் 35 பேர் உயிரிழந்தனர். அங்கு நேற்றைய தினம் வெப்பம் 44.7 டிகிரி வரை சென்று உச்சம் தொட்டது. பீகார் மாநிலத்தில் வெப்ப அலை தீவிரமாக வீசுவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 24ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்தியப் பிரதேசத்திலும் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் கிழக்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்து 3-4 நாள்கள் தீவிர வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக பீகாரின் பல பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web