ட்ரோன்களை அழிக்கும் புதிய வாகனம்! இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம்!

 
ட்ரோன்களைப் பிடிக்க வாகனம் ட்ரோன்

இந்தியாவிலேயே முதல் முறையாக, காவல்துறை அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட வாகனத்தை கேரள போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். 

கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், கொச்சியில், சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கேரள காவல்துறை ஏற்பாடு செய்திருந்த 15 வது கோகோன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ட்ரோன்

அதை சீர் செய்யும் வகையில், இந்த முக்கிய மாநாட்டில், ‘ஈகிள் ஐ’ என்ற புதிய டிடெக்டர் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அனுமதியின்றி 5 கி.மீட்டர் வரையில் பறக்கும் ட்ரோன்களை சென்சார் உதவியுடன் அடையாளம் கண்டு தாக்கி அழிக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வாகனம் இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் அறிமுகப்படுத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும். சுமார் 80 லட்சம் செலவில் இந்த ஈகிள் ஐ வடிவமைக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்

அவ்வாறு பறக்கும் ட்ரோன்களை லேசர் ரேடார் கன் மூலம் தாக்கி அழிக்கும் இந்த வாகனம் அனைவரையும் பிரமிக்க செய்துள்ளது. இதுபோன்ற வாகனங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அச்சறுத்தல்களை ஈகிள் ஐ சிறந்த முறையில் முறியடிக்கும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web